வரும் 27 ம் தேதி வங்க கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த பகுதியாக வலுபெற்றது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் மேலும் வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 27ம் தேதி புதிய புயல் உருவாகும் என்றும் அதற்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆயவு மையம் தெரிவிதது.
இந்த சூழலில் 27 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதகவும், இன்று தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
