கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கரூரில் நடந்த  தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்த விஜய், கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் இன்று காலை 10 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கரூர் மக்களை சந்தித்து விஜய் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனித்தனியே சந்தித்து பேசும் விஜய்,  அவர்களுடைய தேவைகள் என்னென்ன என்பது குறித்து விஜய்யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிிகளை தவெக செய்து கொடுக்கும் என்று விஜய் நேரடியாக உறுதியளித்துள்ளார்.

அதாவது மருத்துவ செலவு, கல்வி செலவு, வேலை வாய்ப்பு உட்பட அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக விஜய் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version