கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் நடத்திய தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டும் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,ல் கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்துக்கு திட்டமிட்ட சதியே காரணம் என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் திமுக அரசுக்கும், தவெக கட்சிக்கும் கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. கரூர் சம்பவம் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இதேநேரம், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. கரூரில் நடந்தது தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரித்து வரும் சூழலில் விசாரணையை எதிர்த்தும், வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஒருவர் தவறு செய்தார் என்பதால் ஒட்டு மொத்த ஆணையத்தையும் குறை சொல்ல முடியாது. இதனால் அருணா ஜெகதீசன் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதேபோல், ”கரூர் விவகாரத்தில் நடந்தது மிகப்பெரிய துயர சம்பவம். உங்களுடைய அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தி கொள்ளாதீர்கள்” என்று கூறிவிட்டு கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
