‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான அதிகாரபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

வருகிற 7-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். மொத்தம் 14 நாட்கள், 7 மாவட்டங்கள், 34 சட்டமன்ற தொகுதிகள் என நீள்கிறது இந்த முதல்கட்ட சுற்றுப்பயணம்.

இதையொட்டி ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

இதற்காக வருகை தந்த இபிஎஸ்-ஐ அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கட்சி அலுவலகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இதையொட்டி பிரச்சார பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version