சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த மாரிசெல்வம் (47) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் கடந்த 2024ம் வருடம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிபதி சுதாகர் மாரிசெல்வத்தை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version