திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாத நிலைக்கு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு மாதங்களாக திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தாங்கள் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சிகளை நடத்த முடியாத நிலைக்கு வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் பாஜகவுடன் இணையும் சூழல் உருவாகலாம் என்றும் கூறினார்.

மேலும், கடந்த 45 முதல் 50 நாட்களாக தவெக எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சே சில அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும், தற்போது மு.க. ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் குடும்பத்தினரை மத்திய அமைச்சராக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், யாருக்கு எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் நிர்மல் குமார் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version