தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காமல் அடம்பிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து 4 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை எம்பி சசிகாந்த் கைவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.2.152 கோடி கல்வில் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த சூழலில் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து, ஆகஸ்ட் 29ம் தேதி முதல் திருச்சி எம்பி சசிகாந்த செந்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் தனது உண்ணாவிரதத்தை தொடர்வந்தாக சசிகாந்த் கூறி வந்தார். மருத்துவமனையில் அவரை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தனை, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சசிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியுள்ளனர். அதன்படி தனது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சசிகாந்த் செந்தில் அறிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version