நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, 2024ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒரு குழு அமைக்கப்பட்டத எனவும்,
2026 நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் அப்போதும் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ மீண்டும் விசாரித்து வருகிறது. மற்றொரு குழு அமைக்கப்படவுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் ஏன் மீண்டும் மீண்டும் நடக்கின்றன? இந்த “தேர்வு வினாத்தாள் சர்ச்சை” குறித்து நீங்கள் ஏன் ஒவ்வொரு முறையும் மௌனம் காக்கிறீர்கள்? தொடர்ச்சியாகத் தோற்றுப்போகும் கல்வி அமைச்சரை நீங்கள் ஏன் இன்னும் பதவியிலிருந்து நீக்காமல் இருக்கிறீர்கள்? என பிரதமர் நரேந்திர மோடியிடம் நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாகப் பதிவிட்டுள்ளார்.

