தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதிகரித்து வருவதால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஜிகே மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் பேசிய அவர், ஜிகே மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்த சக்தி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 2026 ஆம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி வேண்டும் என்ற நிலையில் தமிழக மக்கள் உள்ளனர். மது, போதைப்பழக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பேசினார்.