தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 6,606 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு 5-10% வரை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் 38 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் கட்டன உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 5 முதல் 7 % வரை சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

கார், ஜீப், வேன் உள்ளிட்டவைகள் ஒருமுறை பயணிக்க ரூ.105, பலமுறை பயணிக்க ரூ.160 ஆகவும், இலகு ரக வாகனங்களின் கட்டம் ரூ.275 ஆகவும், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் கட்டணங்கள் ரூ.555 ஆகவும், பல அச்சு வாகனங்களின் கட்டணம் ரூ.595 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ரூ.5 முதல் ரூ.70 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version