தமிழக வெற்றிக் கழகம் பதவி ஏற்க முடியாததற்கு பாரதிய ஜனதா கட்சியே முழு காரணம் என்று சந்தேகம் வரும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் விஜய்க்கு பேராதரவை அளித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் single largest party யாக உருவெடுத்துள்ளது, எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது ஆளுநரின் கடமையாகும் என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதை தாமதப்படுத்தும் எந்த செயல்பாடும் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமன்றி மற்றவர்களாலும் ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும். அதற்கு பாரதிய ஜனதா கட்சியே (BJP) முழு காரணம் என்று சந்தேகம் வரும் எனவும் கூறியுள்ளார்.

விஜய்யின் பாதையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தடையும், அரசியலமைப்பு ரீதியிலான தாமதமாகக் கருதப்படாது; அது பாரதிய ஜனதா கட்சி யின் மறைமுக அரசியலாகவே பார்க்கப்படும்உண்மையில் அப்படி இல்லையென்றாலும் கூட.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தமிழ்நாட்டின் அடுத்த அரசு அமைவதில் தான் குறுக்கே நிற்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அதனால், பாஜகவை மட்டுமே மக்கள் சந்தேகிப்பார்கள்.

எனவே, எந்தவித இடையூறும் இன்றி புதிய அரசு அமைவதை விரைவுபடுத்துவது பாரதிய ஜனதா கட்சியின் சொந்த நலனுக்கே உகந்ததாகும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version