மக்களின் உயிரை காக்க வேண்டிய மருத்துவத் துறையில் ஊழல் புகுந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, போலி மருந்து விற்பனைக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் போலி மருந்துகள் இருப்பதாகவும், தற்போதைய ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் கோடி கோடியாய் பணம் ஈட்ட, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் முழுமையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள புதுச்சேரி NRBJP அரசு சபாநாயகர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வி. வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சுராஜ் ஹேக்டே, துணை தலைவர் ஆர்.கே.ஆர். அனந்தராமன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி,
சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version