பதவிக்காக தந்தையை விட்டு சென்று தமிழ் பண்பாட்டிற்கு அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிட கூடாது:- பாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் டாக்டர்.ராமதாசிற்கே முழு அதிகாரம் உள்ளது என சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்திக்க வருகை தந்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏவும், பாமக இணை பொதுச் செயலாளருமான அருள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

பாமக நிறுவனராக ராமதாஸ் கடந்த 45 ஆண்டுக் காலம் இருந்து பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதையும் செய்து வருகிறார். தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை நிர்வாகிகளை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே.

பாமகவில் தலைவர்களாக தீரன், ஜி.கே.மணி, அன்புமணி போன்றோர் இருந்த போதே நிர்வாகிகளை மாற்றுவதையும், நீக்குவதையும் ராமதாஸ் தான் செய்து வந்தார். அவருக்கே முழு அதிகாரம் உள்ளது. ராமதாசுடன் இருப்பவர்கள் விசுவாசிகள் கூட்டம். இந்த விசுவாசிகள் எப்போதுமே ராமதாசுடன் நிற்பார்கள். ஆனால் இன்று பதவிக்காக பெற்ற தந்தையை விட்டு செல்வது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அன்புமணி மாறிவிடுவாரோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது.

தந்தைக்கு கட்டுப்பட்டவர் மகனாக இருக்க வேண்டும் இது தான் கிராமங்களில் பாரம்பரியமாக, தமிழ் பண்பாடாக இருந்து வருகிறது. ஆனால் அப்பாவிற்கு மகன் கட்டுபட மாட்டேன் என்ற அன்புமணியின் போக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு அன்புமணி ஆளாகிவிட கூடாது. வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version