வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான ராயபுரம் மாடல் லைன் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு தேவை இல்லை என்பதால் அவர்கள் பட்டா கேட்டு பலமுறை மனு செய்தனர். தமிழக அரசு தற்போது அரசுக்கு தேவையில்லாத இடங்களை குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைப்படி ராயபுரம் மாடல் லைன் பகுதியில் 400 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தது.

இதற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆர்.டி. சேகர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது

70 ஆண்டுகளாக இந்த இடத்தில் உள்ள மக்கள் பட்டா பெற முயற்சி செய்தனர் அரசுக்கு தேவை இல்லாத இடம் என்பதால் அரசு ஆணை எண் 97 இன் படி 400 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக தற்போது 236 பேருக்கு பட்டா வழங்குகிறோம். ஜனவரி இறுதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். யாரும் செய்ய முடியாத காரியத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. இதற்காக துணை முதல்வர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் பட்டாக்கள் வழங்க உள்ளோம். ராயபுரத்தில் பல்லாண்டு காலமாக முடியாத போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. செட்டிதோட்டத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆர் எஸ் ஆர் மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. மணிகண்ட முதலிய தெரு அதிநவீன பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பல மாற்றங்கள் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version