ஆளும் திமுக தரப்பில் இருந்து செங்கோட்டையனிடம் கட்சியில் சேர்ந்தால், பல கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை சென்னையில் திமுக தலைமை சார்பாக மூத்த அமைச்சர் ஒருவர் இன்று காலை 2 முறை சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுகவில் சேரும்படி செங்கோட்டையனிடம் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. திமுகவில் சேர்ந்தால், செங்கோட்டையனுக்கு கட்சியில் மாநில அளவில் நல்ல பதவி தரப்படுமென உறுதி அளிக்கப்பட்டதாகவும், 2026 தேர்தலில் அவருக்கும் அவரின் ஆதரவாளர்கள் 2 பேருக்கும் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமென கூறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் 2026 தேர்தலில் போட்டியிட ஆகும் செலவை திமுக ஏற்கும் என்றும், கட்சியில் சேரும்பட்சத்தில் பல கோடி ரூபாய் (ரூ.500 கோடி வரை) தரத் தயாராக கட்சி இருக்கிறது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை பொறுமையாக கேட்ட செங்கோட்டையன், சரியாக பிடிகொடுக்கவில்லை எனவும், அதன்பிறகே மாலையில் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
