“என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன். தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன்” என தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரும் 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வரவிருக்கிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். இந்நிகழ்ச்சி வரலாறு படைக்கும் நிகழ்வாக இருக்கும்.

தவெக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு தடை ஏதும் இல்லை. நான் விருப்பப்பட்டுதான் இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன். கடுமையாக உழைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version