பழ­னி­சா­மி­தான் போலி விவ­சாயி என்றும் காவிரி உரி­மையை நிலை­நாட்­டா­த­வர் பழ­னி­சாமி என்றும் திமுகவின் நாளேடான முரசொலி விமர்சித்து இருந்தது. மூன்று வேளாண் துரோக சட்­டங்­களை ஆத­ரித்­த­வர் பழ­னி­சாமி என்றும் விவ­சா­யி­கள் கடனை ரத்து செய்ய மாட்­டேன்” என்று சொல்லி உச்­ச­நீ­தி­ மன்­றம் வரை போன­வர் பழ­னி­சாமி என்றும் கூறியிருந்தது. இத்­த­கைய அர­சி­யல் ‘களை’ தான் பழ­னி­சாமி. இக்‘­களை’, வரும் தேர்­த­லில் முழு­மை­யாக அகற்­றப்­பட வேண்­டும் என்றும் எழுதி இருந்தது. இதனை திமுகவின் ஐடி விங்-கும் தனது இணையதளத்தில் பகிர்ந்து இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக இணைதளபிரிவின் ராஜ்சத்யன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு..

2014-ல் 37 எம்.பி.க்களை அஇஅதிமுக-விற்கு அளித்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே முடக்கி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைவதை சாத்தியப்படுத்திய இயக்கம் தான் அதிமுக. .

உங்களுக்கும் 2019-ல் 38, 2024-ல் 39 எம்.பி.க்களை அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு, பெஞ்ச் தேய்த்ததை தவிர என்ன கிழித்தீர்கள் என்று திமுக எம்.பி.க்களை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரி, மாநில உரிமை பற்றியெல்லாம் பேச திமுக-வுக்கு வெட்கமாக இல்லையா? .. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த, விட்டுக்கொடுக்கும் ஒரே கட்சி திமுக தான்! அதனை மீட்டுக் கொடுத்த, மீட்டுக் கொடுக்கும், மீட்டுக் கொடுக்கப் போகும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version