Vijay: திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய் பேச்சை கேட்க ஆசையாக இருந்த மக்கள் மைக் வேலை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் நடத்த உள்ளதாக விஜய் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே இன்று காலை 10.30 மணிக்கு மரக்கடை மார்க்கெட் பகுதியில் விஜய் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக காலையில் திருச்சி சென்ற விஜய்யை பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் கூடியது. கட்டுக்கடங்காமல் குவிந்த மக்களால் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் மரக்கடை பகுதியை அடைந்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. காலையில் பேச திட்டமிட்ட நிலையில் மதியம் 2 மணியளவில் பிரச்சார வாகனத்தில் ஏறி விஜய் பேச தொடங்கினார். அப்போது மைக் சரியாக வேலை செய்யாததால் விஜய் பேசுவதை கேட்க முடியாமல் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனினும், தொடர்ந்து பேசிய விஜய், அரசருக்கு போருக்கு செல்வதற்கு முன்பு குல தெய்வத்தை வணக்குவது போன்று அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்னதாக உங்களை சங்க உள்ளேன். நீட் தேர்வையும் மாணவர்களின் கல்வி கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுனீர்களா? பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்? இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து விட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள்.
கல்வி, மருத்துவம், அடிபப்டை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்ற எதையும் செய்ய முடிவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளிப்போம். இதில் சமரசம் செய்ய மாட்டோம்” என பேசினார்.