Close Menu
    What's Hot

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூர் செல்லும் தவெக தலைவர் விஜய்! – பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாட முடிவு…
    அரசியல்

    கரூர் செல்லும் தவெக தலைவர் விஜய்! – பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாட முடிவு…

    Editor TN TalksBy Editor TN TalksOctober 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TVK Karur Stampede
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், மற்றும் சி.டி.குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

    இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். விஜய் தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    இதற்கிடையில், தவெக தலைவர் விஜய், 15 மாவட்ட செயலாளர்களை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த நிலையில் இன்று கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்ததோடு விஜய் வரவுள்ள தகவலையும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விஜய் வரும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    accident District Secretaries karur stampede TVK Vijay WhatsApp call கரூர் கூட்டநெரிசல் தவெக மாவட்டச் செயலாளர்கள் வாட்ஸ்ஆப் அழைப்பு விபத்து விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி வரை பேசும் கரூர் சம்பவம் – அண்ணாமலையின் திட்டம்
    Next Article 3 பேர் சதம் விளாசல்; 2 பேர் நான்கு விக்கெட் – இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    “தனியா போக மாட்டேன்” விஜய்யால் கடுப்பாகும் மூத்த நிர்வாகிகள்!

    Trending Posts

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.