திருச்சி பிரச்சாரத்தில் பேசிய விஜய் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விஜய் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.

விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டை தொடர்ந்து திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அண்ணா 1956ல் தேர்தலில் நிற்க நினைத்தது திருச்சி தான். தொடர்ந்து 1974ல் முதல் மாநாட்டை நடத்தியதும் திருச்சியில் தான். பெரியார் வாழ்ந்த இடமும் திருச்சி தான். 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 வாக்குறுதிகளை கொடுத்தது.

அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின் கட்டண கணக்கீடு, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40 % இட ஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம் என திமுக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?

நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான், ஆனால் திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. மகளிர் விடியல் பயணம் என்று அறிவித்து விட்டு அதில் பயணிக்கும் பெண்களை ஓசி ஓசி என சொல்லிக்காட்டி அவமானப்படுத்துகின்றனர். இதேபோல் மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என திமுகவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version