திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் பகுதியில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து என்றே சொல்லி உள்ளார். கட்சியின் நிலைப்பாடு ஒன்றே அதன்படியே செயல்படுவோம். எந்த குழப்பமும் கிடையாது. தேசிய தலைமை எடுக்கும் முடிவே இங்கு நடக்கும். பேச்சு நடத்தும் கட்சி குறித்து சொல்வார்களா? ஒரு கட்சி அல்ல பல்வேறு கட்சிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஒரு சில திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்தே நடத்த முடியும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது என ஸ்டாலின் எங்காவது சொல்லி உள்ளாரா. இது குறித்து தெரிவித்த உடன் மாப்பிள்ளை நியாபகம் வந்து விட்டார். அவருக்கு மாப்பிள்ளை தான் எல்லாமே என்பது எங்களுக்குத் தெரியும்

தோட்டத்து வீடுகளில் நடைபெறும் கொலை சம்பவங்கள் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பிண்ணனி உள்ளதா என சந்தேகம் உள்ளது. நிலத்தை விற்பனை செய்யும் அவசியம் இல்லாத நிலையில் ரியல் எஸ்டேட் மாபியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகம் உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஒற்றை செங்கலைக் காட்டி மக்களை ஏமாற்றி முடியாது. அமர்நாத் யாத்திரை மட்டுமல்ல காசிக்கும் தமிழர்கள் அதிகம் கலந்து கொள்கின்றனர். தமிழர்கள் வேறு என்கிறார்கள் கோவிலுக்கு அதிகம் செல்பவர்கள் தமிழர்கள் தான். மாநகராட்சி குப்பைகள் அகற்றுவதில் மோசமான நிலை உள்ளது. கோவையில் தான் இந்த நிலை என நினைத்தேன் திருப்பூரில் அதைவிட மோசமான நிலை உள்ளது. கழிவுகளை அகற்றுவதில் அறிவியல் பூர்வமாக அணுகுவதில் தமிழகம் தோல்வி அடைந்துள்ளது. பல்வேறு அமைப்புகள் புதிய தொழில்நுட்பத்துடன் குப்பைகளை அகற்ற முன் வந்தாலும் தமிழ்நாட்டை குப்பை கிடங்காகவே வைத்துள்ளனர் என்றார்.

கீழடி தொடர்பான கேள்விக்கு ஆதிச்சநல்லூர், கீழடியை விட தொன்மையான இடம் அங்கு மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இது போன்று பேசுவதே திமுக கம்யூனிஸ்ட் வேலை என்று வானதி சீனிவாசன் பதிலளித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version