விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ கோளாறில் திருட்டுத்தனமாக வந்த ரசிகரை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி முனையில் பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக நீலாங்கரை வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். அவரது விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வருவஹை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டன. விஜய்யின் விமானம் திருச்சிக்கு வந்ததும் ஒருவர் வேகமாக விமான நிலையத்திற்குள் வந்தார்.
விமான நிலைய ஊழியர் போல் இருந்த அந்த நபரை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள் அவர் மீது சந்தேகப்பட்டு பிடித்தன.ர் அந்த நபரை சோதனை செய்ததில் அவர் தனது கழுத்தில் டேக் மட்டுமே போட்டிருந்தார். ஆனால், அதில் ஐடி கார்டு இல்லை. இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி முனையில் அந்த நபரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் விமான நிலைய ஊழியர் இல்லை என்றும், விஜய் ரசிகர் என்பதும், விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விமான நிலைய ஊழியரை போல் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை துப்பாக்கி முனையில் பிடித்த பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்து அனுப்பினர். +