MY TVK என்ற உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களேஎ உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய்யின் த.வெ.க முதல் தேர்தலை சந்திக்க இருப்பதால், அக்கட்சி தலைவர் விஜய் கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளார். த.வெ.க சார்பில் ’மக்கள் விரும்பும்-முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேப் போல சென்னை பனையூரில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த MY TVK என பெயரிடப்பட்ட புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார்.

தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு அடுத்த மாதம் 25-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version