கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 23ம் தேதி முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், இன்று (ஏப்ரல் 29) 2ம் கட்டமாக 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருந்தது.
Matrize
TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 120 – 140
BJP (பாரதிய ஜனதா கட்சி): 146 – 161
இடதுசாரிகள் + காங்கிரஸ்: 5 – 10
NDTV Peoples Pluses
TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 177 – 187
BJP (பாரதிய ஜனதா கட்சி): 95 – 110
இடதுசாரிகள் + காங்கிரஸ்: 3 – 7
India Today (Axis)
TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 125 – 145
BJP (பாரதிய ஜனதா கட்சி): 145 – 165
இடதுசாரிகள் + காங்கிரஸ்: 2 – 6
Chanakya Strategist
TMC (திரிணாமுல் காங்கிரஸ்): 130 – 140
BJP (பாரதிய ஜனதா கட்சி): 150 – 160
இடதுசாரிகள் + காங்கிரஸ்: 6 – 10
கேரளா
கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக ஆகியவை போட்டியிட்டன. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க இடதுசாரிகள் தீவிரமாக செயல்பட்டன. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று காங்கிரசும் கடுமையான முயற்சியை மேற்கொண்டது. குறிப்பிட்ட தொகுதிகளை பிடிக்க வேண்டுமென்று பாஜகவும் தீவிரமாக செயல்பட்டது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Axis My India
UDF (காங்கிரஸ் கூட்டணி): 78 – 90
LDF (இடதுசாரி கூட்டணி): 49 – 62
NDA (பாஜக கூட்டணி): 0 – 3
People’s Pulse
UDF (காங்கிரஸ் கூட்டணி): 75 – 85
LDF (இடதுசாரி கூட்டணி): 55 – 65
NDA (பாஜக கூட்டணி): 0 – 3
CNN News 18
UDF (காங்கிரஸ் கூட்டணி): 75 – 85
LDF (இடதுசாரி கூட்டணி): 50 – 60
NDA (பாஜக கூட்டணி): 0 – 4
புதுச்சேரி
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணியும், திமுக, காங்கிரஸ் கூட்டணியும், விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Axis My India
NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 16 – 20
SPA (காங்கிரஸ் + திமுக): 6 – 8
TVK (விஜய் கட்சி கூட்டணி): 2 – 4
மற்ற கட்சிகள்: 1 – 3
People’s Pulse
NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 16 – 19
SPA (காங்கிரஸ் + திமுக): 10 – 12
TVK (விஜய் கட்சி கூட்டணி): 0
மற்ற கட்சிகள்: 1 – 2
Praja Poll
NDA (என்.ஆர். காங்கிரஸ் + பாஜக): 19 – 25
SPA (காங்கிரஸ் + திமுக): 6 – 10
TVK (விஜய் கட்சி கூட்டணி): 0
மற்ற கட்சிகள்: 0
அசாம்
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டியது. ஆட்சியை பிடிக்க வேண்டுமென காங்கிரசும் தீவிரமாக முயற்சித்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Today – Axis
NDA (பாஜக கூட்டணி): 75 – 85
ASM (காங்கிரஸ் கூட்டணி): 40 – 50
மற்ற கட்சிகள்: 1 – 4
News24 – Chanakya
NDA (பாஜக கூட்டணி): 78 – 88
ASM (காங்கிரஸ் கூட்டணி): 35 – 45
மற்ற கட்சிகள்: 2 – 5
P-Marq
NDA (பாஜக கூட்டணி): 72 – 82
ASM (காங்கிரஸ் கூட்டணி): 42 – 52
மற்ற கட்சிகள்: 1 – 3
NDTV Peoples Pluses
NDA (பாஜக கூட்டணி): 88 – 100
ASM (காங்கிரஸ் கூட்டணி): 24 – 36
மற்ற கட்சிகள்: 0 – 3
