மீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவர் திருச்சி கிழக்கு தொகுதிப் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் சிலரும் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிகளும் காலியாக உள்ளதால், அங்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தச் சூழலில், அண்மையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.என். நேரு, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  விரைவில் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைவார்” என்று அதிரடியாகப் கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு  தோல்வியடைந்தது குறித்து, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் விமர்சித்து பேசி இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் நேருவின் இந்த பேச்சு அமைந்திருந்தது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின்,  திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், “திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா?” என்று  கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.  மு.க.ஸ்டாலினி ன் இந்தப் பதில், அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை முற்றிலும் மறுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத பின்னடைவுக்குப் பிறகு, ஸ்டாலின் மீண்டும் சட்டமன்றத்திற்குள்  தடம் பதிக்க, திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை அவர் பயன்படுத்துவாரா அல்லது வேறு வியூகங்களை வகுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version