மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வான்கடே மைதானத்தின் பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ வைத்துள்ளார்.

இந்திய அணி அண்மையில் T20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடருக்காக மும்பை வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்ட்யா மிகத் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் தொடரின் போது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், உலகக்கோப்பைக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இரவு பகல் பாராமல் உழைத்த வான்கடே மைதான பராமரிப்பு ஊழியர்களின் ஒத்துழைப்பை அவர் மறக்கவில்லை.

தனது பயிற்சிக் காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொரு ஊழியரின் அர்ப்பணிப்பையும் பாராட்டும் விதமாக, ஹர்திக் பாண்ட்யா அனைவருக்கும் தலா ரூ.10 லட்சம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஒரு சிலருக்கு மட்டும் வழங்காமல், மைதானத்தைப் பராமரிக்கும் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் கௌரவித்த அவரது இந்த மனிதநேயம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரவிருக்கும் ஐபிஎல் (IPL) தொடருக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், ஹர்திக்கின் இந்தச் செயல் அவர் மீதான ரசிகர்களின் பார்வையை மாற்றியுள்ளது. “மைதானத்தில் ஆட்டிடியூட் காட்டினாலும், அடிமனதில் நீ ரொம்ப நல்லவன்யா” என நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version