கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகின் லெஜண்டரி மற்றும் முடிசூடா மன்னராக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகனான அர்ஜூன் டெண்டுல்கரும், தந்தையை போலவே கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியும் வருகிறார் அர்ஜூன். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அர்ஜூன், தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அர்ஜூன் டெண்டுல்கருக்கும் சானியா சந்தோக் என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சானியா சந்தோக் பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். இவர் பாவ்ஸ் பெட் ஸ்பா மற்றும் ஸ்டோர் எல்.எல்.பி நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version