மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது அபாரமான திறமையால் 5 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். இதில் குறிப்பாகப் பெண்களுக்கான பிரிவில், இந்தியாவுக்கு 4 “தங்கமகள்கள்” கிடைத்துள்ளனர். மீனாட்சி (48 கிலோ), பிரீத்தி (54 கிலோ), பிரியா (60 கிலோ) மற்றும் அருந்ததி (70 கிலோ) ஆகிய நால்வரும் தங்களது எதிராளிகளை வீழ்த்தி தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆடவர் பிரிவிலும் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விஷ்வாந்த் சுரேஷ், ஜப்பானைச் சேர்ந்த டைச்சி இவாயியை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய அணியின் இந்த ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டினால், பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இளம் வீரர்களின் இந்த வெற்றி, சர்வதேச குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதி செய்துள்ளது.
