Close Menu
    What's Hot

    மயிலாடுதுறை : உப்பாக உள்ள நிலத்தடி நீர்..! குறுவை சாகுபடி பாதிப்பு..! விவசாயிகள் வேதனை..! 

    அதிமுகவில் மீண்டும் கோஷ்டி மோதல்? சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்..!!

    மீண்டும் ஒரு ’குஷி’… ஹீரோவாகும் லியோனல் மெஸ்சி – வைரலாகும் புகைப்படம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஸ்திரேலியாவுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா !!! சீக்கிரமாக நடந்து முடிந்ததால் வந்த சிக்கல்
    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா !!! சீக்கிரமாக நடந்து முடிந்ததால் வந்த சிக்கல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251123 155431
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்றைய முன்தினம் ( நவம்பர் 21 2025 ) தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் ஆரம்பமானது.

    20251123 154036 ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் வரை நடைபெறும். ஆனால் ஒரு சில சமயங்களில் வேடிக்கையாக இரண்டு முதல் மூன்று நாட்களிலேயே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்துவிடும். அதேபோலதான் முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிட்டது. டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நான்காவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை மிகவும் குறைந்த கால இடைவெளியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    20251123 151227

    இரண்டு நாட்களுக்குள் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை :

    • நாள் 1: 51,531

    • நாள் 2: 49,983

    மொத்தம்: 101,514 | ஒரு நாளைக்கு சராசரி: 50,757

    20251123 152008

    முதல் இரண்டு நாட்களில் என்றும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக மூன்றாவது நாளுக்கான டிக்கெட் விற்பனை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று போட்டி முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய வீரர் ஹெட் மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்கூட்டயே டிக்கெட் வாங்கிய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதும் கூடுதல் தகவல்.

    20251123 154301

    போட்டி நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நடந்திருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த மைதானத்தில் கிடைக்க வேண்டிய 17.35 கோடி ரூபாய் வருவாய் கிடைக்காமல் போனது.

    20251123 154552

    கடந்த மாதம் கூட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், “2024–25 நிதியாண்டில் நிகர பற்றாக்குறை $11.34 மில்லியனாக ( இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் ) இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது முதல் டெஸ்ட் போட்டி விரைவாக நடந்து முடிந்ததால் சுமார் 17.35 கோடி ரூபாயை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Ashes Australia england Optus Perth
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிச. 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    Next Article திகில் படம் எடுக்க பேயாக மாறணுமா? – இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் ஒரு ’குஷி’… ஹீரோவாகும் லியோனல் மெஸ்சி – வைரலாகும் புகைப்படம்!

    July 16, 2026

    ஃபிஃபா அப்டேட் : மீண்டும் அரையிறுதிக்குள் நுழந்தது அர்ஜென்டினா.. அரையிறுதியில் போராடி தோற்றது இங்கிலாந்து..!

    July 16, 2026

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மயிலாடுதுறை : உப்பாக உள்ள நிலத்தடி நீர்..! குறுவை சாகுபடி பாதிப்பு..! விவசாயிகள் வேதனை..! 

    அதிமுகவில் மீண்டும் கோஷ்டி மோதல்? சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்..!!

    மீண்டும் ஒரு ’குஷி’… ஹீரோவாகும் லியோனல் மெஸ்சி – வைரலாகும் புகைப்படம்!

    விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!! தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு பச்சைக்கொடி?

    லஞ்சம், மோசடி ; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.