ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் கேப்டன் ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது மைதானத்திலேயே இ-சிகரெட் (E-cigarette) புகைத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் தங்கும் அறையிலேயே (Dressing Room) அவர் எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்தும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘எலக்ட்ரானிக் சிகரெட் தடைச் சட்டத்தின்’ (Prohibition of Electronic Cigarettes Act, 2019) கீழ், இ-சிகரெட்களை உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://x.com/desiculerr/status/2049174167350546576?

விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்குள் புகையிலை அல்லது சிகரெட் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவது ஐபிஎல் விதிமுறைகளின்படி கடுமையான குற்றமாகும். ஏற்கனவே மைதானத்தில் தனது செயல்பாடுகளால் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளான ரியான் பராக், தற்போது சட்டவிரோதமான இ-சிகரெட்டைப் பயன்படுத்தியது பிசிசிஐ (BCCI) வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிமீறல் தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் அவர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version