இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.
மெல்போர்ன், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் பணிச்சுமை காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகி விட்டார். இதனால் ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்துகிறார்.
இந்த போட்டிக்காக டாஸ் போடப்பட்டது. அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சை தேர்வுசெய்தது. இங்கிலாந்தின் ஜோஷ் டங், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன.
ஹெட் 12 ரன்னிலும், வெதரால்ட் 10 ரன்னிலும்,லபுஸ்சேன் 6 ரன்னிலும், சுமித் 9 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆஸ்திரேலிய அணி 51 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது.
