தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து கேப்டன் கில் வெளியேறினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தவுடன் வருகிற நவம்பர் 30 முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்க இருக்கிறது. கில் வெளியேறிய நிலையில் இந்திய அணியை கே எல் ராகுல் வழிநடத்தப் போகிறார்.இன்று மாலை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அச்செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
https://x.com/BCCI/status/1992561040559894534?t=9Iq7DO_HeZWU4k5X4DadxQ&s=19
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கின்றனர். அணியில் திலக் வர்மா, ருத்ராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் ஒரு நாள் அணி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முதல் ஒரு நாள் போட்டி ராஞ்சியிலும் இரண்டாவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூரிலும் மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திலும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டி இந்திய நிரப்படி மதியம் 1:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.
