சோசியல் மீடியா மற்றும் வலைதளங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பற்றிதான். நேற்று இரவு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவின் மேல் சவுதி அரேபியா முதலீடு செய்யப்பட்டிருந்த 600 பில்லியன் டாலர்களை இப்பொழுது 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்துப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் இரு நாட்டின் பாதுகாப்பு முதல் சிவில் அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் வரையிலான பேச்சு இந்த விருந்தில் நடந்து முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விருந்தில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இலான் மஸ்க், டிம் குக், கால்பந்தாட்ட பிஃபா ப்ரெசிடெண்ட் என பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களுள் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜோர்ஜியானா இருவரும் விருந்தில் பங்கேற்று கொண்டனர்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடன் ரொனால்டோ மற்றும் அவரது மனைவி ஜோர்ஜியானா இணைந்து பேசிக் கொண்டே நடந்து செல்லும் வீடியோவை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் TWO GOATS ( எக்காலத்திலும் சிறந்தவர்கள் ) என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

https://x.com/WhiteHouse/status/1991151873970020681?t=RJCdaBHjhiI5p1JtjTc7EQ&s=19

விருந்து உபசாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “எனது இளைய மகன் பார்ரோன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகர். இன்று எனது இளைய மகன் ரொனால்டோவை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. இதற்குப் பின் எனது மகன் தனது தந்தையிடம் ( டொனால்ட் ட்ரம்ப் ) சற்று கூடுதல் மரியாதையுடன் நடந்து கொள்வார் என நம்புகிறேன்”, என்று நகைச்சுவையுடன் அனைவரும் மத்தியில் பேசினார்.

https://x.com/TrumpDailyPosts/status/1990959987473199446?t=vbcz-IeH9O-vBfUal2yg3w&s=19

எல்லாவற்றுக்கும் மேலாக ஓவல் ஆபிஸில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மற்றும் அவரது மனைவி ஜோர்ஜியானாவும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படத்தில் வெள்ளை மாளிகையின் சாவியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் கையில் வைத்திருந்தது தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version