Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»சாம்பியன் கேப்டனை பிளாக் செய்த SRH? வார்னர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் வைரல்!
    விளையாட்டு

    சாம்பியன் கேப்டனை பிளாக் செய்த SRH? வார்னர் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட் வைரல்!

    Editor web3By Editor web3May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SRH Warner
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரை, அந்த அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டேவிட் வார்னர் மொபைலில் தேடியபோது, அவருக்கு ‘User Not Found’ மற்றும் ‘This Profile is Private’ என்ற வாசகங்கள் திரையில் காட்டியுள்ளன. பொதுவாக ஒரு கணக்கு பிளாக் செய்யப்பட்டால் மட்டுமே இதுபோன்று காட்டும் என்பதால், வார்னர் அதனை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “அவர்கள் என்னை ஒருபோதும் அன்-பிளாக் செய்ய மாட்டார்கள்” என்றும் வார்னர் பதிலளித்துள்ளார்.

    ஹைதராபாத் அணியின் முதுகெலும்பாகவும், மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை  வென்று கொடுத்த ரன் மெஷினாகவும் திகழ்ந்த வார்னரை அணி நிர்வாகம் இப்படி நடத்துவதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்குத் தனது சிறப்பான கேப்டன்சி மூலம் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்த ஒரு கேப்டனை, சமூக வலைதளங்களில் பிளாக் செய்யும் அளவிற்கு நிர்வாகம் நடந்துகொள்வது மிகவும் மோசமான செயல் என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2021 ஐபிஎல் தொடரின்போதே வார்னருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். அந்த கசப்பான சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சமூக வலைதளப் புறக்கணிப்பும் நீடித்து வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியலால் சரிந்ததா சினிமா செல்வாக்கு?. முதலிடத்தை இழந்தார் விஜய்!
    Next Article அமைச்சர் பதவி ஆதங்கத்தால் தனிச்சின்ன தீர்மானமா? – மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் விளக்கம்
    Editor web3
    • Website

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.