மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், தனக்கு மிகவும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளது பெரிய சவாலாக இருக்குப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப சிறிது அவகாசம் தேவைப்படுவதாகவும், மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவன் என்றும் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் எடுக்க திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 21 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 13.62ஆக உள்ளது. இந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று (டிச. 20) அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன.
