இந்திய வீராங்கனைகளுக்கான ஊதியத்தை 150% வரை உயர்த்தி பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியனும் ஆகிவிட்டது.

அதாவது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணியும் அனைத்துவிதமானப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறது.  இந்தநிலையில், திருத்தப்பட்ட ஊதிய அமைப்பின்படி, கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்கமளிக்கும் விதமாக உள்நாட்டு போட்டிகளில் சீனியர் வீராங்கனைகள் இனி தினசரி ஊதியமாக ரூ.50,000, ரிசர்வ் வீராங்கனைகள் முறையே ரூ.25,000 மற்றும் ரூ.12,500 ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, விளையாடும் அணியில் உள்ளவர்களுக்கு 25,000 ரூபாயும், மாற்று வீரர்களுக்கு 12,500 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும்.

ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில், திருத்தப்பட்ட ஊதியத்தின்படி, விளையாடும் அணிக்கு ஒரு நாளைக்கு 25,000 ரூபாயும், மாற்று வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 12,500 ரூபாயும் வழங்கப்படும். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, விளையாடும் அணிக்கு 12,500 ரூபாயும், விளையாடாத வீரர்களுக்கு 6,250 ரூபாயும் கட்டணமாக வழங்கப்படும்.

முன்னதாக, சீனியர் வீராங்கனைகள் ஒருநாளைக்கு போட்டிக் கட்டணமாக ரூ.20,000 மட்டுமே பெற்றனர். இதேபோல், ரிசர்வ் வீராங்கனைகளுக்கும் ஊதியம் ரூ.10,000 ஆக இருந்தது. கடைசியாக 2021ஆம் ஆண்டு மகளிர் போட்டிக் கட்டணத்தைத் திருத்திய பிசிசிஐ, மூத்த வீராங்கனைக்கு தினசரி சம்பளமாக ரூ.12,500 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி இருந்து.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version