ஆசிய இளைஞர் பாரா விளை​யாட்டுப் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை துபா​யில் நடை​பெற்​றது. இதில் டேபிள் டென்​னிஸ் போட்​டி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த பேபி சஹானா ரவி, நிதிஷ் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு பதக்கங்களை வென்​றிருந்​தனர்.

பேபி சஹானா ரவி 23 வயதுக்​குட்​பட்ட மகளிர் ஒற்​றையர் கிளாஸ் 9 பிரி​வில் பிலிப்​பைன்சை சேர்ந்த மங்​கின்சே லெனி மேரியை 6-11, 11-5, 11-8, 11-3 என்ற கணக்​கில் வீழ்த்தி தங்​கப் பதக்​கத்​தை​யும், கலப்பு இரட்​டையர் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கத்​தை​யும் வென்​றார். நிதிஷ் 23 வயதுக்​குட்​பட்ட ஆடவருக்​கான ஒற்​றையர் கிளாஸ் 9 பிரி​வில் வெண்​கலப் பதக்​கத்தை வென்​றார்.

இந்​நிலை​யில் இவர்​கள் இரு​வருக்​கும் மயி​லாப்​பூர் விளை​யாட்டு அறக்​கட்​டளை சார்​பில் நேற்று சென்னை ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் இந்திய டேபிள் டென்​னிஸ் ஜாம்​ப​வான் சரத் கமல் சிறப்பு விருந்தினராக கலந்​து​கொண்டு பேபி சஹா​னா, நிதிஷ் ஆகியோரை பாராட்​டி​னார். பயிற்​சி​யாளர்​கள் சீனி​வாச ராவ், முரளிதர​ராவ், மீனாட்சி ஆகியோ​ரும்​ விழாவில் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version