நவம்பர் 3 2025 : சற்று நேரத்துக்கு முன்பு ஐ.சி.சி உலக தரவரிசை புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான தரவரிசை புள்ளி பட்டியலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஐசிசி ஆடவர் அணி விபரம் :
டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் 124 புள்ளிகளுடன் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஆடவர் பேட்ஸ்மேன் விபரம் :
டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டை பொறுத்தவரையில் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார். டி 20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
ஐசிசி ஆடவர் பந்து வீச்சாளர் விபரம் :
டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், டி 20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதலிடத்தில் இருக்கின்றனர்.
ஐசிசி ஆடவர் ஆல் ரவுண்டர் விபரம் :
டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்ஜாய், டி 20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் ஆகியோர் முதலிடத்தில் இருக்கின்றனர்.
