டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடு செய்யப்படுகின்றன.
நடப்பு டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும், இன்று தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இலங்கை, கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதுவரை இவ்விரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13-3 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, 8 போட்டிகளில் விளையாடி இந்தியா 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
https://x.com/ANI/status/2022893023282200837?
இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடு செய்யப்படுகின்றன. பீகார், ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கோரக்பூரில் உள்ள சிவன் கோவிலில் ஒரு பக்தர், “இன்று இந்தியாவின் வெற்றிக்காக மகாதேவனிடம் பிரார்த்தனை செய்தோம்” என்று கூறினார். உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது, அங்கு ரசிகர்கள் இந்திய அணி வீரர்களின் படங்களை ஏந்திக் கொண்டிருந்தனர்.
https://x.com/ANI/status/2022866883465384166?
https://x.com/ANI/status/2022874266522522101?
ஜார்கண்டின் தியோகரில் ஒருவர், “இந்தியா 200 ரன்கள் எடுக்க வேண்டும், பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும், பாகிஸ்தானை மோசமாக தோற்கடிக்க வேண்டும் என்று மகாதேவனிடம் பிரார்த்தனை செய்தேன்” என்றார். மற்றொரு ரசிகர், “இன்று சிவராத்திரி மற்றும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, இதை விட சிறந்தது என்ன இருக்க முடியும்? ஷாஹீன் அப்ரிடியை வெளியேற்றி, இந்திய அணியை வெற்றிபெறச் செய்ய மகாதேவனிடம் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
