ராய்ப்பூரில் இன்று (டிச.3) நடைபெறும் தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து ராய்ப்பூரில் இன்று நடைபெறும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 அணிகளும் மோதுகின்றன.

டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி கடந்த முறையைப் போன்றே இம்முறையும் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா வென்றால், போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அதேநேரத்தில் தெ.ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால், 1-1 என்ற கணக்கில் வரும். பிறகு 3வது ஒருநாள் போட்டியில் 2 அணிகளுக்கும் கடும் போட்டி நிலவும். எனவே இன்றைய போட்டியில் 2 அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடும்.

ஆதலால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இன்றையப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version