Close Menu
    What's Hot

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு; கேள்விக்குறியான ஷமியின் எதிர்காலம்!
    விளையாட்டு

    மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிப்பு; கேள்விக்குறியான ஷமியின் எதிர்காலம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1200 675 25344477 thumbnail 16x9 shami
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.

    இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். அதன் பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன.

    இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளதுடன், துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    shami

    அதேசமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இத்தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் 35வயதாகும் முகமது ஷமி, கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயத்தை சந்தித்தார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ஷமி, கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.

    அதன்பின், அவர் இந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய நிலையில், அவரது ஃபார்ம் காரணமாக அதன் பிறகு எந்த வடிவத்திலும் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், இரண்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார். இதன் காராணமாக தென்னாப்பிரிக்க தொடரில் ஷமி நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

    ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. ஷமி காயத்தில் இருந்து மீண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவர் தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தேர்வாளர்கள் மீதான விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.

    shami#india#team
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: மதியம் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு
    Next Article 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
    Editor TN Talks

    Related Posts

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    December 24, 2025

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    December 24, 2025

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    அதிவேக தனிநபர் ஸ்கோர்!. ஏபி டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!.

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    எப்ஸ்டீன் விவகாரம்!. டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தவறானவை!. நீதித்துறை விளக்கம்!.

    Trending Posts

    அதிமுக 170, பாஜக 23, பாமக 23… கசிந்தது தொகுதி பங்கீடு

    December 24, 2025

    விரைவில் வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம்! தேர்தலுக்கு தயாராகும் இபிஎஸ்

    December 24, 2025

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    மகாத்மா பெயர் நீக்கம்!. தமிழகம் முழுவதும் 400 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!.

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.