முல்லன்பூரில் நடைபெற்ற ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3வது நாளில் வெற்றியை உறுதி செய்தது இந்திய அணி.

முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழக்குப்பு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களம்கண்ட ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 152 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் பெரும் பின்னடைவை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி, பாலோ-ஆன் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 2வது இன்னிங்ஸிலும், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.

இந்த வெற்றியின் மூலம் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியின்றி விளையாடிய சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வி அடையாமல் விளையாடிய உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version