ராஞ்சியில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 349 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், ரோஹித் சர்மா 57 ரன்களும், கே.எல். ராகுல் 60 ரன்களும் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 18, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13, ரவீந்திர ஜடேஜா 32 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. முதல் 3 விக்கெட்டுகள் வேகமாக சரிந்தபோதிலும், பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர்.

குறிப்பாக, போஸ் கடைசி வரை போராடினார். எனினும் அவர், 49.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 332 ரன்கள் எடுத்திருந்தபோது,  67 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தெ.ஆப்பிரிக்க அணி 332 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இதனைத் தொடர்ந்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வரும் 3-ம் தேதி ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version