இந்திய பிக்கிள்பால் சங்கத்தின் ஆதரவுடன் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள் விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 1 முதல் 7 வரை இந்தியன் பிக்கிள்பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளின் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், குர்கான் ஆகிய நகரங்களை மையமாக கொண்ட மும்பை ஸ்மாஷர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை சூப்பர் வாரியர்ஸ், ஹைதராபாத் ராயல்ஸ், குர்கான் கேப்பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியன் பிக்கிள்பால் லீக்கில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
