இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் டிசம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விசாகப்பட்டித்தில் முதல் 2 போட்டிகளும், எஞ்சிய 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளன. இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீராங்கனை உள்பட புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த குணாலன் கமலினி, வைஷ்ணவி ஷர்மா இருவருர் அறிமுக வீராங்கனைகளாக களமிறங்க உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கமலினி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
