19வது ஐபிஎல் தொடரின் இன்று (மே 27) நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐதராபாத்- ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய (மே 27) போட்டி இரவு 7.30 மணிக்கு முலான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி, இந்தத் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் இருப்பதால், இரு அணிகளும் வெற்றிக்காகப் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீக் சுற்றில் 18 புள்ளிகளுடன் சிறப்பாகச் செயல்பட்ட ஐதராபாத் அணி, கடந்த கால நேருக்கு நேர் மோதல்களில் ராஜஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில் கிளாசென், ஹெட், அபிஷேக் சர்மா போன்ற அதிரடி பேட்டர்கள் வலுசேர்க்கின்றனர்.

கடைசி கட்டத்தில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்த ராஜஸ்தான் அணி, நல்ல ஃபார்மில் உள்ள வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை நம்பியுள்ளது. பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

முலான்பூர் ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதால், தடையற்ற ஆட்டத்தைக் காண ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். டாஸ் வெல்லும் அணி சேஸிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version