டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கியப் பங்காற்றினார். வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும், அவர் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியைக் கண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், 2009-ல் சஞ்சுவை முதன்முறையாக சந்திக்கும் போது அவருக்கு 14 வயது. சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமையுடன் காணப்பட்ட அந்தச் சிறுவனைப் பார்த்து, நீ தான் அடுத்த தோனி என்று நான் கூறினேன். அவர் இன்று அடைந்துள்ள உச்சத்தைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் கம்பீர் தனது இந்த கருத்தைத் திருத்தியதாக சசி தரூர் குறிப்பிட்டார். என் நண்பர் கௌதம் காம்பீர் என்னிடம், ‘இல்லை, இல்லை, அவர் அடுத்த தோனியாக ஆக வேண்டிய அவசியமில்லை, அவர் ஒரே சஞ்சுவாகவே இருப்பார்’ என்று கூறினார். அவர் அப்படியேதான் இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தனித்துவமான பாணி இருக்கும் என்றும், மற்றவர்களுடன் ஒப்பிடுவது அந்த வீரரின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும் என்றும் கம்பீர் சுட்டிக்காட்டினார். சஞ்சு சாம்சன் தற்போது இந்திய டி20 அணியில் அடுத்தடுத்த தனது முத்திரையைப் பதித்து வரும் சூழலில், சசி தரூர் பகிர்ந்த கம்பீரின் இந்த பழைய கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
