கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியது ஐபிஎல் 2025. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுகள் மே மாதம் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் 22 பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐபிஎல் லீல் சுற்றுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஜூன் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஆகையால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்பும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப தயங்குவதாகவும், அந்ததந்த அணி நிர்வாகத்தினர் மற்றும் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
இப்படிப்பட்ட சூழலில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியிலிருந்து பட்லர் விலகுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிகெட் தொடர்கள் நடைபெறவுள்ளன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால், பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்-ல் முழுமையாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் குஜராத் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணி வீரர் குசல் மெண்டீஸ் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ளார்.