இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று நிறைவடைந்தது.2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர் முழுக்க சிறப்பாக விளையாடிய விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். சர்வதேச அளவில் இது அவருக்கு 22 ஆவது தொடர் நாயகன் விருதாகும்.

சர்வதேச அளவில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் தற்பொழுது விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.
- விராட் கோலி (இந்தியா) – 22 *
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 20
- ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) – 17
- ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 15
- சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 13
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 13
ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்) இருந்து வந்தார். அவரின் சாதனையை முறியடித்து தற்பொழுது ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக விராட் கோலி ( 53* சதங்கள்) இருக்கிறார்.

அதேபோல ஒரு நாள் போட்டிகளில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பதினைந்து விருதுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து 12 விருதுகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் நான்கு விருதுகள் பெற்றால் ஒருநாள் போட்டிகளிலும் அதிக தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
