இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ரோகித் ஷர்மா ஓய்வு பெற்று விட்டநிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இந்திய டெஸ்ட் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ந் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான இடையிலான போட்டியில் சாய் சுதர்சனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விளையாட்டு இதழ் ஒன்றுக்கு சாய் சுதர்சன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.. நான் ஐ.பி.எல் தொடரின் இறுதிபோட்டிக்கு பிறகு விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இதற்கு முன்பாகவும் அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். நான் எப்போதெல்லாம் அவரிடம் பேசுகிறேனோ அப்போதெல்லாம் பேட்டிங் குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

குறிப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது விராட் கோலியின் மனநிலை, கடினமான நேரங்களை அவர் எவ்வாறு கையாளுகிறார் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளேன். அவரிடம் இருந்து வரும் பதில்களின் மூலம் நான் நல்ல தெளிவையும் பெற்றுள்ளேன். பேட்டிங்கில் அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் தனது திறமை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என அனைத்துமே அவரை பெரிய வீரராக மாற்றியுள்ளது.

அந்த வகையிலே அவரிடம் இருந்து கிடைக்கும் அறிவுரைகளை வைத்து என்னுடைய கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் பேட்டிங் ரீதியான தொழில்நுட்ப விவாதங்களும் எங்களுக்குள் நடைபெற்றுள்ளது. நிச்சயம் அது எனக்கு இங்கிலாந்து மண்ணில் சாதிக்க உதவும்” என்று கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version